• இந்திய வானியல் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ‘G.C. அனுபாமா’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய வானியல் சங்கம் 1972ல் வைணு பாப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • டோகா (கத்தார்) நகரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னீஸ் போட்டியில் “எலிஸ் மெர்டென்ஸ்” (பெல்ஜியம்) சிமோனா ஹாலெப்-யை (ருமேனியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார். 50 கி.மீ, 10 கி.மீ என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
  • ‘ஐயேஜ்’, ‘ஆக்ஸி’ மற்றும் ‘ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி’ அமைப்புகளின் சார்பில் ‘ஈவி எண்டாஸ்கோப்பி 2019’ என்ற அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது. ஐயேஜ்-ன் தலைவர் ரிஷ்மா திலான்பாய். ஐயேஜ்-ன் செயலாளர் கிருஷ்ண குமார். எண்டாஸ்கோப்பி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கஜராஜ்
  • ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்ற ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 7.5 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் அமேதியில் (உத்திரபிரதேசம்) உள்ள அரசு போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது.
12353Next