• சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Initiative” (BRI) திட்டத்தில் இணைவதற்கு “இத்தாலி” நாடு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.G7 நாடுகளில் இருந்து Belt Road Initiative திட்டத்தில் இணையும் முதலாவது நாடு இத்தாலி ஆகும்.
  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் (IIT – Madras) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உப்பு நீரை சூரிய ஒளியின் மூலம் குடிநீராக மாற்றும் முதலாவது ஆலையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் அமைத்துள்ளனர்.இத்திட்டத்திற்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தினால் நிதியளிக்கப்படுகிறது.
  • மைக்ரோ சாப்ட் நிறுவனமானது வாசிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, டிஜிட்டல் தகவல்களை டி.என்.ஏ (DNA) ஆக மாற்றும் கருவியை கண்டறிந்துள்ளனர்.இந்த மென்பொருள் அமைப்பானது 0 மற்றும் 1 என்ற டிஜிட்டல் தகவல்களை DNA வரிசையில் உள்ள (அடினைன், தையமின், குவானைன், சைட்டோசைன்) ஆக மாற்றி தரவுகளை சேமிக்கிறது.
  • மனித உரிமை மீறல்களால் உரிமை மற்றும் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் – மார்ச் 24 (International Day for the Right to the truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims). மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக சிட்டுக்குருவிகள் தினம்-மார்ச் 20 (World Sparrow Day). சிட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2019 உலக சிட்டுக்குருவிகள் தின மையக் கருத்து: “நான் விரும்பும் சிட்டுக்குருவி” (I Love Sparrow) என்பதாகும்.
Previous101112131468Next