• ஆஸ்திரேலியா நாட்டின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான விக்டோரியா விருது – 2019 (2019 Victorian Prize for Literature), பெஹ்ருஸ் பூசானி (Behrouz Boochani) என்ற ஈரானிய அகதி பெற்றுள்ளார். இவருக்கு “No Friend But the Mountains: Writing from Manus Prison” என்ற படைப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது. கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம். உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை என்று சொல்லலாம்.
  • பாகிஸ்தானின், குவாம்பர் – ஹாதாத்கோட் பகுதியின் சிவில் கோர்ட் நீதிபதியாக “சுமன் குமாரி” என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த முதல் பெண் நீதிபதி இவரே ஆவார்.
  • பாகிஸ்தானின், குவாம்பர் – ஹாதாத்கோட் பகுதியின் சிவில் கோர்ட் நீதிபதியாக “சுமன் குமாரி” என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த முதல் பெண் நீதிபதி இவரே ஆவார்.
  • உலக எஃகு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டில், எஃகு உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக எஃகு உற்பத்தியில் தொடர்ந்து சீனா முதலிடத்தில் நீடிக்கிறது.
Previous1234551Next