• 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில், பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக, அமைக்கப்பட்ட தூம்பானது, திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படும் நோக்கிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்திய-சீன ஆகியவற்றின் ராணுவப்படைகள் பங்கேற்கும் 14-நாள் கூட்டுப்பயிற்சி வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தென்மேற்கு சீனாவிலுள்ள செங்டு பகுதியில் தொடங்கவுள்ளதாக சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை பாகிஸ்தானுடன் கூட்டு விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வாணையத்துக்கு புதிய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோலி முதல் இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களில் கோலி 82-வது இடத்தில் உள்ளார். விராட்கோலி இந்த ஆண்டில் ரூ.170 கோடி வருமானம் ஈட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
Previous303132333468Next