• உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி. உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”. உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
  • சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர். இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர். அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணம் இயற்றினார்.
  • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர். மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள். தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி – என தமிழ் மக்களால் கொண்டாடுவர். பாரதியார் ”நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி”, ”தன்னிகரற்ற புலமைபெற்ற பேரறிவாளர்”. பாரதி என்ற பட்டம்எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசபையால் வழங்கப்பட்டது. 1904ல் மதுரையில் பாரதி எழுதிய பாடல்”விவேகபானு” என்னும் இதழில் வெளியானது. மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில்தமிழ் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார்.
Previous585960