• குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
  • அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது. அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி. ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி. ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
  • மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சி மாவட்டம் “எண்ணெய்க்கிராமத்தில்” பிறந்தார். பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார். தமது தந்தையிடமே கல்வி கற்றார். மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் “திரிசிரபுரத்தில்”(திருச்சி) வாழ்ந்தார்.
  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தன் என்பது இவரின் இயற்பெயர். இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர். தானிய வாணிகம் செய்தவர். தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
  • உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி. உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”. உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
Previous65666768Next