• போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் உயரிய அமைப்பான “போலீஸ் புகார்கள் ஆணையத்தின் (Police Complaints Authority) தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.தேஜி (P.S. Teji) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை பற்றி விவாதிப்பதற்கான “உதித்தெழும் இந்தியா” உச்சி மாநாடு 2019 – ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது.இம்மாநாட்டின் கருத்துரு:- “அரசியலுக்கு அப்பால் தேசத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை” (Beyond Politics; Detining National Priorities) என்பதாகும்.
  • நான்காவது “உலகளாவிய ஆரோக்கியத்தில் டிஜிட்டல் பங்களிப்பு” உச்சி மாநாடானது (4th Global Digital Health Partnership summit), மத்திய சுகாதார அமைச்சர் J.P. நட்டா புதுடெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். இம்மாநாடானது ஆரோக்கியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மூலம் திறம்பட செயல்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டது.
  • ஆசியன் ஹாக்கி சம்மேளனத்தின் 2018ம் ஆண்டின் சிறந்த ஹாக்கி வீரருக்கான விருது இந்தியாவின் “ஹர்மன்பிரீத் சிங்க்கு வழங்கப்பட்டுள்ளது.2018ம் ஆண்டின் சிறந்த எழுச்சி வீரர் (Rising Player of the Year) விருது “லாரம்சியோமி(இந்தியா)” (Lalremsiami)-க்கு வழங்கப்பட்டது.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI ) முதல் ஊழல் விசாரணை அதிகாரியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி “டி.கே.ஜெயின்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.BCCI –ன் தலைவராக தற்போது C.K.கண்ணா என்பவர் உள்ளார்.
Previous5678960Next