• பேரிடர் நிவாரணப் பயிற்சியான “ரகாத் பயிற்சி” (Rahat Exercise) ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், கோட்டா ஆல்வார் ஆகிய பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் உதவியுடன், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சப்த சக்தி பிரிவு ஒரு மனிதாபிமான கூட்டு உதவிப் பயிற்சியும் பேரிடர் நிவாரணப் பயிற்சியையும் நடத்தியது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் உணவு சேகரிக்கும் முறைக்கு ஊக்கமளித்து, உணவு வீணாவதை தடுப்பதற்காக, அம்மாநிலத்தின் முதல் மெகா உணவுப் பூங்காவானது “உனா மாவட்டத்தில்” அமையவுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் குளிர்கால தலைநகர் – தர்மசாலா மற்றும் கோடைக்கால தலைநகர் – சிம்லா.
  • சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில், 45 – 48 கி.கி., ‘Light fly’ ’ பிரிவில், 1700 புள்ளிகள் பெற்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.
  • இந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கிடையே நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நீலப் பொருளாதார துறையில் சர்வதேச அளவில் முன்னணி நாடாக நார்வே உள்ளது.
  • டிரம்ப் (அமெரிக்க அதிபர்) மற்றும் கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர்) – ன் இரண்டாவது சந்திப்பானது வரும் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற உள்ளது. இருவருக்குமிடையேயான முதல் சந்திப்பு ஜூன் 12, 2018 அன்று சிங்கப்பூரில் உள்ள சென்டோசா நகரில் நடைபெற்றது.
12351Next