இன்றைய நடப்பு நிகழ்வுகள் (05.02.2019)

  • ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 நபர்கள் பட்டியலில், 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே திரைத்துறையில் இருந்து தேர்வாகி உள்ளார். இவருடன் யூடியூபில் நடித்துப் பிரபலமான பிரஜக்தா கோலி, கிரிக்கெட்டர் ஸ்மிரிதி மந்தனா, விளையாட்டு வீரர்கள் ஹிமா தாஸ் மற்றும் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தொழில்துறை, உற்பத்தி மற்றும் ஆற்றல், விளம்பரத் துறை, வர்த்தகம், ஊடகம், விவசாயம் உள்ளிட்ட 16 துறைகளில் இருந்து சாதனை மனிதர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
  • அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக, வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது. வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அதில் தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. உலகில் இன்னும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்றும் கூட. வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர்.

  • இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு, பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது. ஹிந்தி மொழியின் பிரபல எழுத்தாளர் பிரேம் சந்த். இவரது நினைவாக சார்க் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான பிரேம்சந்த் ஃபெல்லோஷிப் விருது அறிவிக்கப்பட்டது. சாகித்ய அகாதெமி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அந்த விருதை ஐ.சாந்தனுக்கு அதன் தலைவர் சந்திரசேகர் கம்பார் வழங்கினார்.
  • கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது. கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம். உலகிலேயே ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இதுவே முதல் முறை என்று சொல்லலாம்.
  • விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி அப்லிங்க், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்போன் சேவைகளுக்காக, ஜிசாட்-31 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் சார்பில் 40ஆவது செயற்கைக்கோளான ஜிசாட்-31ஐத் தயாரித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ. புவிவட்டப் பாதையில் கேயு வரிசை டிரான்ஸ்பான்டர் திறனை அதிகப்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும், 27 கி.மீ., நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன. டில்லியில் வாகன நெரிசலைக் குறைக்க, கிழக்கு புறவழி விரைவு சாலை, அசாமில், போகிபீல் பாலம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.‘பிரதமர் கிராம சாலை திட்டம்’ மூலம், கிராமப்புறங்களில், சாலை வசதி மும்மடங்கு பெருகியுள்ளது. 17.84 லட்சம் குடியிருப்பு பகுதிகளில், 15.8 லட்சம் பகுதிகளுக்கு, இணைப்பு சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here