இன்றைய நடப்பு நிகழ்வுகள் (06.02.2019)

 • NCC (National Cadet Corps) யின் நிர்வாக இயக்குநராக (Director General Of NCC) இராஜிவ் சோப்ரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளது. NCC அமைப்பானது 16 ஏப்ரல் 1948ல் உருவாக்கப்பட்டுள்ளது.
 • ஆஸ்திரேலியா நாட்டின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான விக்டோரியா விருது – 2019 (2019 Victorian Prize for Literature), பெஹ்ருஸ் பூசானி (Behrouz Boochani) என்ற ஈரானிய அகதி பெற்றுள்ளார். இவருக்கு “No Friend But the Mountains: Writing from Manus Prison” என்ற படைப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
 • ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியானது, முன்னாள் சாம்பியனான ஜப்பான் அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2019 ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் மதிப்புமிக்க வீரராக “அல்மோஸ் அலி” (கத்தார்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 • அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும்பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம். இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம். தபால், விமான நிலையம், துறைமுகம், ரெயில்வே உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கான சேவைகள் பாதிக்காத அளவில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் அமலில் இருக்கும்போது போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 • 2019 தாய்லாந்து ஓபன் டென்னிஸ் (2019 Thailand Open Tennis) போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை, டயனா யாஸ்ட்ரிம்ஸ்கா (Dayana Yastremska) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
 • தமிழ்நாட்டில் செயல்படும் பல்லவன் – பாண்டியன் கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு, “தமிழ்நாடு கிராம வங்கி” என்ற பெயரில் புதிய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ், இந்தியன் வங்கியின் சார்பு வங்கியாக இயங்க உள்ளது.
  தலைமையகம் சேலத்தில் உள்ளது.
 • சாலை பாதுகாப்பு வார விழா (2019), பிப்ரவரி 04–10 (Road Safety week 2019 4 to 10 February 2019)
  பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “சாலை பாதுகாப்பு வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டு, 30வது சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படுகிறது.
 • INSTEX – ஈரான் வர்த்தக மேம்பாட்டு திட்டம் ஈரானை அமெரிக்காவின் வர்த்தக தடைகளிடமிருந்து காப்பாற்ற ஐக்கிய நாடுகள், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இணைந்த செயல்படுத்தும் திட்டமே INSTEX என்னும் திட்டமாகும். INSTEX – Instrument is Support of Trade Exercise.

 • பெங்களுரிவில் புதிய “மனித விண்வெளி விமான மையத்தை” இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. இந்த மையம் இஸ்ரோவின் தலைமையகம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் மற்றும் தற்போதைய இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் இந்த மையத்தை துவக்கி வைத்தனர். இந்த மையம் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் தலைமையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • மலேசியாவில் “சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா” மன்னராக பதவி ஏற்றார். துணை மன்னராக “சுல்தான் நஸ்ரின் ஷா” பதவி ஏற்றுள்ளார். மன்னர் முடியாட்சியின் கீழ், கூட்டாச்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. 2016ம் ஆண்டு இறுதியில் பதவி ஏற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது. தனது பதவிகாலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6ம் தேதி பதவி விலகினார்.
 • பியூஷ் கோயல் IEA யின் ‘இரயிலின் எதிர்காலம்’ (The future of Rail) என்ற அறிக்கையை ஜனவரி 30 (2019) அன்று வெளியிட்டார். இரயில் சேவையின் தற்போதைய மற்றும் எதிர்கால முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்து. IEA – International Energy Agency.
 • ஐ.சி.டி அகாடெமி பிரிட்ஜ் 2019 என்ற மாநாட்டை தமிழ்நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர். மணிகண்டன் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டின் 37வது பதிப்பின் கருப்பொருள் – “Fostering India Industry 4.0” என்பதாகும்.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here