இன்றைய நடப்பு நிகழ்வுகள் (07.02.2019)

  • சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த டிஜிகாப் செயலி மூலம் செல்போன், பைக் திருட்டை தவிர்க்க முடியும். பழைய மொபைல், பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க இந்த செயலி உதவும்’.
  • இந்தியாவின் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் துவக்கி வைக்க உள்ளார்.
  • விவசாயத்திற்கும் அதுசார்ந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வகையில் எவ்வித பிணையையும் இல்லாத, “கிசான் சுவிதா கடன்” என்ற திட்டத்தை உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி (Ujjivan Small Finance Bank) தொடங்கியுள்ளது.
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, அர்ஜென்டினாவின் இந்தியத் தூதராக பணியாற்றி வரும் சஞ்சீவ் ரஞ்சன் என்பவரை கொலம்பியக் குடியரசின் புதிய தூதராக நியமித்துள்ளது.

  • மாணவர்கள் தங்கள் கணினி அல்லது செல்பேசி மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், மாதிரி தேர்வுகளையும் மேற்கொள்ளும் வகையில் தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency), “NTA Students App” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சர்.சி.வி. ராமன் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் கேரட்டிலிருந்து சீரான லேசர் கதிரை (Random Laser Ray), சென்னை ஐ.ஐ.டி (Chennai – IIT) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காய்கறியிலிருந்து லேசர் கதிர் உற்பத்தி செய்யப்படுவது உலகிலேயே இதுதான் முதல்முறை.
  • ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயூஷ் சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் பிப்ரவரி 6 (நேற்று) நடைபெற்றது. இம்மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சர்கள் பங்கு பெற்றனர். தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயூஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 23, 2018 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • கொல்கத்தாவிற்கு அருகே உள்ள மாயாபூரில் உலக பாரம்பரிய மையம் (WHC – World Heritage Centre, Mayapur) அமையவுள்ளது. இதில் 45 நாடுகளின் ‘ஆன்மீக முகாம்கள்’ (Spiritual Camps) அமையவுள்ளது.
  • விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக ஊக்கத் தொகை வழங்கும் திட்டமான “கலியா சக்ரவிருதி யோஜனா” (Kalia Chhatravritti Yojana) என்னும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here