இன்றைய நடப்பு நிகழ்வுகள் (08.02.2019)

  • பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தைத் தீர்க்கும் கிளிபோசேட் (அமெரிக்காவின் மான்சான்டா நிறுவனத்தின் மருந்து) பூச்சிக் கொல்லி மருந்திற்கு, கேரள மாநில அரசானது தடை விதித்துள்ளது. இது மனிதர்களுக்கு புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • தாய்லாந்தில் நடந்த பளுதுாக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 24. கடந்த 2017ல் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
  • இட்லி, உப்புமா, டோக்ளா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை, 3 அல்லது 4 ஆண்டுகள் கெட்டுப் போகாமல் பராமரிப்பதற்கான, புதிய தொழில் நுட்பத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயற்பியல் பேராசிரியை, டாக்டர் வைஷாலி பாம்போலே கண்டுபிடித்துள்ளார். இட்லி உப்புமா, டோக்ளா போன்றவற்றை வேக வைத்த உணவுப் பொருட்களை எந்தவித கூடுதல் பொருட்களும் சேர்க்காமல் அப்படியே 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பதற்கான பீம் ரேடியேசன் என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
  • பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியோர்க்கு தமிழக அரசால் வழங்கப்படும், பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதானது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • அம்ரீந்தர் சிங் (பஞ்சாப் முதல்வர்), பியாஸ் நதியில் மட்டுமே காணப்படும் ஒரு அரிதான பாலூட்டியான, “சிந்து நதி டால்பின்களை” பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளார்.
  • சமூக நீதிக்கான “K. வீரமணி விருதானது” P.S கிருஷ்ணன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் “இந்தியாவில் சமூக விலக்கு மற்றும் நீதி (Social Exclusion and Justice in India), ஒரு சாலை வரைபடம்” (A Road map) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • தேசிய அளவில் பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பசுக்களை பாதுகாப்பது, பல்வேறு பசு இனங்களை மேம்படுத்துவது, இதன் மூலம் சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • இந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக கொண்டுவரப்பட்ட விதிகளின்படி, அதிபர் முன்னிலையில் பதவியேற்ற முதல் தூதர் என்ற பெருமை நீலாம்பர் ஆச்சார்யாவையே சேரும். ரஷியாவின் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆச்சார்யா, 1990-களில் சட்டம், தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். இலங்கைக்கான தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
  • கியர் இல்லாத மின்னணு ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 16 வயதுடையவர்களுக்கு லைசன்ஸ் வழங்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 70 கிலோ மீட்டர் வேகத்திற்குட்பட்ட மின்சாரத்தால் இயங்கும் கியர் இல்லாத பைக், ஸ்கூட்டர்களை ஓட்ட லைசன்ஸ் வழங்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடையாத பதின் பருவத்தினர் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது குறித்த நீண்ட கால பிரச்சனைக்கு இந்த மாற்றம் தீர்வு காணும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
  • இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில், 42 கலைஞர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கினார். டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், 42 கலைஞர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கினார். ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டில் சிறப்பான பங்களிப்புக்காக, உமாகாந்த் மற்றும் ரமாகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைப் பிரிவில், மிருதங்க வித்வான், திருவாரூர் வைத்தியநாதன், புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஷஷாங்க் சுப்ரமண்யம் உட்பட, 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது. நடனம் மற்றும் நாடக பிரிவுகளில், தலா, ஒன்பது பேரும், கிராமிய மற்றும் பழங்குடி இசை, நடனம், நாடகம் மற்றும் பொம்ம லாட்டம் போன்ற பாரம்பரிய கலைப் பிரிவில், 10 பேரும், இந்த விருதை பெற்றனர். கலைகளுக்கான ஒட்டுமொத்த பங்களிப்புக்காக, சந்தியா புரேச்சாவுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விஜய் வர்மாவுக்கும், இந்த விருது வழங்கப்பட்டது.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here