இன்றைய நடப்பு நிகழ்வுகள் (17.02.2019)

  • ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்ற ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 7.5 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் அமேதியில் (உத்திரபிரதேசம்) உள்ள அரசு போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது.
  • ஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 (LAIRCM) விமானத்தை 190 மில்லியனுக்கு இந்திய அரசு வாங்க உள்ளது. இதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நீண்ட தூர பயணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ‘ஏர் இந்தியா ஒன்’ அல்லது ‘இந்தியன் ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று அழைக்கப்படும். LAIRCM– என்பது மனிதத் தாக்குதல், மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து விமானத்தைப் பாதுகாக்கும் ஓர் திட்டமாகும்.
  • செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா 2003ம் ஆண்டு அனுப்பிய ஆபர்ச்சுனிட்டி ரோவர் முழுமையாக செயலிழந்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலில் சிக்கிய அந்த விண்கலம் காணாமல் போனது. அந்த புயலில் வேகம் குறைந்து சராசரி நிலையை எட்டிய போது, ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  • இந்தியாவின் முதல் பெண் விமானப் பொறியாளராக ஹினா ஜெய்ஸ்வால் (சண்டிகர்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விமானப் பொறியாளராக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் செயல்பாட்டு பிரிவுகளில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்த்ரா தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றதை அடுத்து புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவராக கசானி ஞானேஸ்வரர் முடிராஜூம் துணைத் தலைவர்களாக தினேஷ் பட்டீல், ஜெகதீஷ்வர் யாதவ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இணைச் செயலாளர்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.சபியுல்லா மீண்டும் தேர்வாகியுள்ளார். இவர் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here