இன்றைய நடப்பு நிகழ்வுகள் (18.02.2019)

  • கவுகாத்தியில் நடைபெற்ற 83வது “தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்” பெண்கள் ஒற்றையர் பிரிவில் “சாய்னா நேவால்” சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • புல்வாமா தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த “வர்த்தகத்திற்க்கு உகந்த நட்புறவு நாடு” (Most Favored Nation) என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் (60 கிலோ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக (ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
  • ‘ஐயேஜ்’, ‘ஆக்ஸி’ மற்றும் ‘ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி’ அமைப்புகளின் சார்பில் ‘ஈவி எண்டாஸ்கோப்பி 2019’ என்ற அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது. ஐயேஜ்-ன் தலைவர் ரிஷ்மா திலான்பாய். ஐயேஜ்-ன் செயலாளர் கிருஷ்ண குமார். எண்டாஸ்கோப்பி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கஜராஜ்

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here