இன்றைய நடப்பு நிகழ்வுகள் (19.02.2019)

  • சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து, தூய்மையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கும்பகோணம் நகராட்சிக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மற்றும் அம்பிகாபூர் ஆகிய நகரங்கள் முறையே முதல் பரிசையும், இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றுள்ளன. 2019ஆம் ஆண்டுக்கான தூய்மை இந்தியா விருதுகளுக்காகக் கடந்த டிசம்பர் மாதம் கும்பகோணம் நகராட்சி விண்ணப்பித்தது. தமிழகத்திலேயே இந்த விருதை முதன்முறையாகப் பெறும் நகரமாக கும்பகோணம் பெயர் பெற்றுள்ளது.
  • தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார். 50 கி.மீ, 10 கி.மீ என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. 50 கி.மீ பிரிவில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் சிங் 4 மணி, 23 நிமிடம், 23 விநாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். குஜராத் ஜோஷி சாகர், ஹரியாணாவின் பவன்குமார் இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றனர். 10 கி.மீ ஆடவர் பிரிவில் சுராஜ் பன்வார் (உத்தரகாண்ட்), ஜூனத் (ஹரியாணா), பார்மன் அலி (உபி) முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். மகளிர் பிரிவில் ரோஹி பாட்டீல் (உத்தரகாண்ட்), சுவப்னா (ம.பி), குர்ப்ரீத் கெளர் (பஞ்சாப்) முதல் மூன்றிடங்களைப் பெற்றனர்.
  • இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்மார்ட் குப்பைத்தொட்டி (Smart Dustbin (Reverse Vending Machine) பயன்பாட்டினை, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நவீன ’ஸ்மார்ட் குப்பைத்தொட்டி’ யில் போடப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குளிர்பான அலுமினிய டின்களுக்கு இந்த Reverse Vending Machine மூலமாக சலுகைக் கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகைக் கூப்பன்களைக்கொண்டு பொது மக்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம்.

  • குஜராத்தில் அமைந்து உள்ள, சர்தார் படேல் சிலையை வடிவமைத்த, ராம் வான்ஜி சுதார் உள்பட, மூவருக்கு, கலாசார ஒருமைப்பாட்டுக்கான, தாகூர் விருது வழங்கப்பட்டது. கலாசார ஒருமைப்பாட்டுக்கான தாகூர் விருது வழங்கும் விழா, டில்லியில் நடந்தது. கடந்த, 2014 - 16ம் ஆண்டுகளுக்காக, இந்த விருது வழங்கப்பட்டது. மணிப்பூரைச் சேர்ந்த நாட்டிய கலைஞர், ராஜ்குமார் சிங்கஜித் சிங்குக்கு, 2014ம் ஆண்டுக்கும்; 'சயானத்' என்ற, வங்கதேச கலாசார அமைப்புக்கு, 2015ம் ஆண்டுக்கும் விருது வழங்கப்பட்டது. குஜராத்தில் உலகிலேயே மிக உயரமாக, சர்தார் வல்லபபாய் படேல் சிலையை வடிவமைத்த, சிற்பக் கலைஞர் ராம் வான்ஜி சுதாருக்கு, 2016ம் ஆண்டுக்கும் விருது வழங்கப்பட்டது.
  • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் 9–ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்று, சிவபுராணத்தின் பொருளை உணர்த்தும் பாடலுக்கு 20 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியமாடி நிகழ்ச்சி, கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவன நிதி விவகாரப் பிரிவின் இயக்குநராக, ஏ.கே.சர்மாவை மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதி விவகாரப்பிரிவு இயக்குநர் பதவியிலிருந்து ஏ.கே.சர்மா கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இருப்பினும், அந்தப் பதவியில் மேலும் 3 மாதங்களுக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியிலிருந்து அவர் அந்தப் பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் தொடரில், ஆறு முறை தங்கப்பதக்கம் வென்ற, இந்திய வீராங்கனை மேரி கோம் புமா விளையாட்டு நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறு தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்திய பெண்கள் தங்களின் லட்சியத்தை நோக்கி சாதனை புரிவதற்கு ஊக்குவிக்கும் விதமாக இவர், அந்நிறுவனத்தின் ஹெஷ்டக் டூ யூ கேம்பைனின் (# Do you campaign ) தூதராக வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here