இன்றைய நடப்பு நிகழ்வுகள் (21.02.2019)

  • நிலவினைப் பற்றிய ஆய்விற்காக, பெரேஷீட் (Beresheet) எனப்படும் ஆளில்லா விண்கலத்தை இஸ்ரேல் நாடானது, பால்கன் – 09 என்ற இராக்கெட் மூலம் நிலவில் தரையிறக்க உள்ளது.
  • உலக சமூக நீதி தினம் – பிப்ரவரி 20 (World Day of Social Justice). ஐக்கிய நாடுகளின் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதி உலக சமூக நீதி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினமானது முதன் முதலில் 2009ல் கடைபிடிக்கப்பட்டது. 2019ம் ஆண்டின் உலக சமூக நீதி தின மையக்கருத்து: ‘நீங்கள் அமைதி மற்றும் மேம்பாட்டை விரும்பினால், சமூக நீதிக்கான வேலை பாருங்கள்’ (If you want peace and Development, work for Social Justice) என்பதாகும்.
  • இந்திய வானியல் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ‘G.C. அனுபாமா’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய வானியல் சங்கம் 1972ல் வைணு பாப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • AntBot என்ற பெயரில் ஜி.பி.எஸ். உதவியில்லாமல் நடமாடும் உலகின் முதல் ரோபோட்டை, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த CNRS (National Centre for Scientific Research) அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

  • பல்கேரியாவில் நடைபெற்ற ஸ்டெரன்ஜா சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் (Strandja Memorial Tournament) இந்தியாவின் நிகாத் ஸ்ரீன் (Nikhat Zareen) மகளிர் 51 கிலோ எடைப்பிரிவிலும், மீனா குமாரி தேவி, மகளிர் 54 கிலோ எடைப்பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர். மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • நான்காவது ‘விவசாய தலைமைத்துவ கூடுகை – 2019’ (Agri leadership summit 2019) ஹரியானாவின் சோனிபாட் மாவட்டத்தின் கானவுர் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது குறித்தும், உற்பத்தியை பெருக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ‘சர்வதேச பூஜ்ஜிய நோக்கு மாநாடு’ (International vision zero conference) மும்பையில் நடைபெற்றது. இம்மாநாட்டை இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சமூக விபத்து காப்பீடு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியுள்ளது.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here