இன்றைய நடப்பு நிகழ்வுகள்

ஒடிசாவைச் சேர்ந்த “கந்தமால் ஹால்டி” (Kandhamal Haldi) என்ற மஞ்சள் வகைக்கு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவுசார் சொத்து இந்தியாவின் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.சிறந்த மருத்துவ குணங்களை பெற்றதற்காக இப்புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக “பி.தேவதாஸ்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக லோக் ஆயுக்தாவில் நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. கே. ஜெயபாலன்
2. ஆர். கிருஷ்ண மூர்த்தி
இவர்கள் இருவரும் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள் ஆவர்
3. எம். இராஜராம்
4. கே. ஆறுமுகம்
இவர்கள் இருவரும் நீதித்துறை சாராத உறுப்பினர்கள் ஆவர்.
குறிப்பு
லோக் ஆயுக்தா சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையில் 2018 ஜூலை 9ல் நிறைவேற்றப்பட்டது.
தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக கே. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) முதல் இந்திய உறுப்பினராக பிரஃபுல் பட்டேல் (Praful Patel) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூத்த நடிகையான “ரீட்டா மோரேனா” 2019ம் ஆண்டிற்கான பீபாடி தொழில்சார் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார். (Peabody Career Achievement Award). இந்த விருதானது மின்னணு ஊடகத்தில் ஆற்றிய பணி மற்றும் பொறுப்பின் மூலம் அந்தத் துறையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

தைவானில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 16 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது.கடைசி நாளில், 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் “யாஷ் வர்தன்” உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பானின் புதிய பேரரசராக, இளவரசர் நரு ஹிடோ, 2019 மே 1ம் தேதி முடிசூட உள்ளார். இவரது ஆட்சி காலம், “ரெய்வா சகாப்தம்” என அழைக்கப்படுகிறது.ஜப்பானின் தற்போதைய சகாப்தம் “ஹெய்சேய்” ஆகும். அதன் பொருள் சமாதானத்தை அடைதல் என்பதாகும்.

இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோர காவற்படை மற்றும் மொரீஷியஸ் கடலோர காவற்படை ஆகியவற்றிற்கு 100 போர் கப்பல்களை கட்டமைத்து வழங்கிய இந்தியாவின் முதலாவது கப்பல் கட்டும் தளமாக கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் என்ற நிறுவனம் உருவெடுத்துள்ளது.
இது தற்போது தனது 100வது போர் கப்பலான “IN LCU – L
56” என்பதை உருவாக்கியுள்ளது.

TNPSC Annual Planner - Click here

தமிழக வேலைவாய்ப்பு செய்திகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here