இன்றைய நடப்பு நிகழ்வுகள்

ஹோமியோபதி மருத்துவத்தை கண்டறிந்த டாக்டர்.கிறிஸ்டின் ப்ரெட்ரிச் சாமுவேல் ஹன்மான் அவர்கள் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில்; ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ம் நாள் ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2019-20 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2020-21ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேச நிதியம் அமைப்பு (IMF) கணித்துள்ளது.சர்வதேச நிதியம் (IMF) டிசம்பர் 27, 1945ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி – யில் உள்ளது.

சர்வதேச வர்த்தக சபையின் (ICC- International Chamber of commerce) இந்தியப் பிரிவின் தலைவராக “விக்ரம்ஜித் சிங் சஹினி” (Vikramjit singh shaney) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா மீதான 17 வது உலக பொருளாதார மன்ற மாநாடானது “ஜோர்டானில்” நடைபெற்றது.இம்மாநாட்டில், இப்பகுதியில் உள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தேசிய பசுமை தீர்பாயத்திலிருந்து “ISO” (International Organisation for Standardisation) சான்றிதழைப் பெற்ற இந்திய இரயில்வேயின் முதல் ரயில்நிலையமாக கௌகாத்தி ரயில் நிலையம் உள்ளது.
தூய்மையான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலில் பயணிகள் சேவை வழங்கியதற்காக இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் இராணுவ தொழில் நுட்பத்தை மேம்பாடு செய்வதற்காக மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை அதிகரிப்பதற்கான, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இராணுவங்களுக்கிடையேயான “போல்ட் குருஷேத்ரா -2019” (Bold kuruskshetra -2019) இராணுவப் பயிற்சியானது ஜான்சியில் நடைபெற்றது.

TNPSC Annual Planner - Click here

தமிழக வேலைவாய்ப்பு செய்திகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here