இன்றைய நடப்பு நிகழ்வுகள்

ஜனவரி 1, 2019 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆந்திர பிரதேச மாநிலத்தின் உயர்நீதி மன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக “நீதிபதி விக்ரம் நாத்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அகலாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் எழுத்தாளருக்கான “சரஸ்வதி சம்மன் விருது – 2018” என்ற விருது, தெலுங்கு எழுத்தாளர் “K. சிவா ரெட்டி” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அவரின், பக்கிகி ஒட்டிகிலிகேட் (Pakkaki Ottigilite) என்ற பாடல் தொகுப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்டவெளியில் மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட, கருந்துளையை (BLOCK HOLE) முதல் முறையாகப் படமெடுத்து விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்.இந்த கருந்துளையானது சுமார் 5 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள மேசியர் – 87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ளது. இது எம்-87 (M-87) என்றழைக்கப்படுகிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள உலகின் மிக மாசுபடிந்த நகரங்களின் பட்டியலில் (World most polluted city) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளது. மற்ற 3 இடங்கள் – லக்னோ, வாரணாசி மற்றும் ஆக்ரா ஆகியவை ஆகும்.

வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான, இந்தியாவின் முதல் வாக்காளர் பூங்காவானது (India’s First Voter Park) ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது.

919ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரிட்டின்; பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இந்தியாவுடனான பிரிட்டனின் கடந்த கால வரலாற்றில் “துயரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உதாரணம்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

சாதாரண மனிதர்களைப் போல காதுகேளாதோரும் வார்த்தைகளை கற்றுக் கொள்வதற்காக “DEF-ISL” என்ற மொபைல் செயலியை, லார்சன் டூப்ரோ (எல் அன்ட் டி) சமூக பொறுப்புணர்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.DEF-ISL செயலியின் மூலம் காதுகேளாதோர், மொழிகளில் உள்ள வார்த்தைகளையும், சைகை மொழியினையும் கற்றுக் கொள்ளலாம்.

TNPSC Annual Planner - Click here

தமிழக வேலைவாய்ப்பு செய்திகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here