விஐடி (VIT) எனப்படும் வேலூர் தொழில்நுட்பக் கழகம் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்தது.

இத்தேர்வு முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் vit.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், வெளியாகியுள்ளது. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் மே 9ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.