பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் தற்போது 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வில் பல ஆண்டுகளாக மாநில முதலிடத்தை தக்க வைத்தது விருதுநகர்.

இச்சாதனை பிளஸ் 2 தேர்ச்சியிலும் தொடர்ந்தது. ஆனால் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 7 வது இடம் பெற்றது. பத்தாம் வகுப்பில் கடந்தாண்டு 3வது இடம் வகித்த விருதுநகர் தற்போது 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதம் 97.92. கடந்தாண்டைவிட 0.34 சதவீதம் குறைவு. 


விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், ''கணக்கு தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல தேர்ச்சி வீதம் பெற்றுள்ளோம். முதலிடம் பிடிக்க ஆசிரியர்கள் கடுமையான பயிற்சி அளித்தனர். சிறப்பு பயிற்சி கையேடுகளும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இருந்தும் 6 வது இடம் வந்தது வேதனை அளிக்கிறது. வரும் கல்வியாண்டில் முதலிடம் பெற முயற்சிப்போம்,'' என்றார்.