இன்றைய நடப்பு நிகழ்வுகள் (01.10.2018)

 • சமீபத்தில் உலகில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர். அதை தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குட்டிகளும் நல்ல ஆரோக்யத்துடன் உள்ளன.
 • இந்திய தலைநகர் டெல்லியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அரசு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 • 2018ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசை ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் டசகு ஹான்ஜோ ஆகியோர் கூட்டாக பெறுகிறார்கள்.
 • முதியோரை கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடத்த வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச முதியோர் தினம் ((International Day of Older Persons) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
 • முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
 • இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

 • நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக்ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பி நகரில் நடந்த போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
 • குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்- முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 • நாட்டில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுப்பிய ரூ.425 கோடி மதிப்பிலான திட்ட கருத்துருவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • கஞ்சா போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனிப்படையினர் ஆய்வறிக்கை ஒன்றை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் அளித்துள்ளனர். அதில், மாவட்ட காவல் துணை ஆணையர்களின் தனிப்படையை கண்காணிக்க வேண்டும் என்பன உட்பட 19 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
 • தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசியகாந்தி அருங்காட்சியகம் சார்பில் டிஜிட்டல் மல்டி மீடியா தொகுப்பு மற்றும் காந்தியின் இதயத் துடிப்பு ஒலிநாடா வெளியிடப்படுகிறது.
 • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறையினர் 1 மணி நேரத்தில் ரூ.1 கோடி வரை கடன் பெறும் வசதியினை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளாமலேயே வங்கிகள் இந்த சேவையை அளிக்க உள்ளதாக நிதித்துறை செயலர் ராஜிவ் குமார் கூறியுள்ளார். இதற்காக www.psbloansin59minutes.com என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா பவரால் நிறுவனம் மரைன் இன்ஜின்கள் பிரிவில் புதிய இன்ஜின்களையும், ஜெனரேட்டர்களையும் அறிமுகம் செய்துள்ளது. ‘சீ ஹாக்’ என்ற பிராண்டின் கீழ் 15 HP முதல் 300 HP வரையிலான திறன் கொண்ட இன்ஜின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here