இன்றைய நடப்பு நிகழ்வுகள் (02.10.2018)

  • 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு இயற்பியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஸ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்சியோயேவ் பிரதமர் மோடியை நேற்று (அக்டோபர் 01)) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை விசா இல்லாமல் அனுமதிப்பது, வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் ஒத்துழைப்பு வழங்குவது. சுற்றுலாவில் ஒத்துழைப்பு வழங்குவது ஆகியவை குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் ஆகும்.
  • உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் சாம்சன் நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி.
  • நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்தது. இதன்படி தமிழகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 01ஆம் தேதி டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது.
  • இந்தியாவின் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இந்தியா திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ள பயண திட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

  • நான்கு நாள் பயணமாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளஅவர், டெல்லியில் ஐ.நா. இல்லத்தை நேற்று (அக்டோபர் 01) திறந்து வைத்தார்.
  • மத்திய அரசு சார்பில் உலக முதியோர் தின விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவையாவும் விருது பெற்றார். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
  • இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் கொண்டுவந்துள்ளது மத்திய தகவல் ஆணையம். இதனால், கிரிக்கெட் வீரர்களின் ஊதியம், வாரியத்தின் ஆண்டு வருமானம், வீரர்கள் தேர்வு செய்யும் முறை பற்றிய பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
  • பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2-வது இந்திய பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here