இன்றைய நடப்பு நிகழ்வுகள் (17.10.2018)

உலக செய்திகள்

 • ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி நேற்று (அக்டோபர் 16) நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக 38 வயதான மயீன் அத்துல் மலேக்-ஐ புதிய பிரதமராக நியமித்துள்ளார். சலேம் அஹமது சயீத்தை துணை பிரதமராக நியமித்துள்ளார்.

 

இந்திய செய்திகள்

 • உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரான அலகாபாத்தின் பெயரை மாற்றி, 500 ஆண்டுகளுக்கு முந்தைய பெயரான பிரயாக்ராஜ் என்று சூட்டியுள்ளது உத்திரபிரதேச அரசு.

 

தமிழக செய்திகள்

 • மூத்த பத்திரிகையாளரும் அறிவியல் எழுத்தாளருமான என்.ராமதுரை காலமானார். அவருக்கு வயது 85. ‘தினமணி’ நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் வார இணைப்பாக வெளிவந்த ‘தினமணி சுடரின்’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். ‘விண்வெளி’, ‘அணு’, ‘அறிவியல் - எது ஏன் எப்படி?’, ‘எங்கே இன்னொரு பூமி?’, ‘பருவநிலை மாற்றம்’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
 • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட பணியிடங்களில் 2 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள 2 சதவீத உள் ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 • ஐ.எம்.பி.எஸ். தளம் உலகின் சிறந்த பரிவர்த்தனைக்கான கண்டுபிடிப்பு என்று அமெரிக்காவின் ஃபிடெலிட்டி நேஷனல் இன்ஃபர்மேஷன் சர்வீஸ் பாராட்டியுள்ளது. ஆன்லைன் பணப் பரிமாற்றத் தளமான ’உடனடிக் கொடுப்பனவுச் சேவை’ (ஐ.எம்.பி.எஸ்) 2010ஆம் ஆண்டில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. IMPS - Immediate Payment Service
 • ஒளியை ஸ்லோமோஷனில் படம்பிடிக்கும் திறன் கொண்ட உலகின் அதிவேகமான கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP ((Compressed Ultrafast Photography - CUP) என்ற கேமராவை உருவாக்கியுள்ளன.
 • இந்தியாவின் பொதுத் துறை தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனது தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில் நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாகத் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்குவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

நியமனங்கள்

 • ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த சாந்தா கோச்சார் ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவியில் சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார்.
 • மத்திய அரசாங்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்திற்கு சச்சின் சத்தூர்வேதி மற்றும் ரேவதி அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

விருதுகள்

 • வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்னா பர்ன்ஸ் பெற்றுள்ளது 50-வது மேன் புக்கர் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு

 • 206 நாடுகள் கலந்து கொண்டுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதன் ஆக்கி (5 பேர்) போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளி வென்றது. மலேசியா தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் சந்தித்தன. தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
 • சார்ஜாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரத்துல்லா பெற்றார்.

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here