இன்றைய நடப்பு நிகழ்வுகள் (18.10.2018)

உலக செய்திகள்

  • பின்லாந்து நாட்டின் வல்லுனர்கள் குழுவான செயற்கை நுண் அறிவாற்றல் (artificial intelligence) துறையின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் முதல் இடத்தில் அமெரிக்காவும், அடுத்த இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தியா 13-வது இடத்தை பிடித்துள்ளது.
  • எத்தியோப்பிய நாட்டின் அமைச்சரவையில் முதல் முறையாக ஐம்பது சதவீதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமராக அபை அகமது கடந்த ஏழு மாதங்களுக்கு முன் பதவியேற்றார். அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 28லிருந்து 20ஆகக் குறைத்துள்ள அவர் அதில் சரிபாதி பெண் அமைச்சர்களுக்கு இடம் வழங்கியுள்ளார்.

இந்திய செய்திகள்

  • 2-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நேற்று (அக்டோபர் 18) தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றுள்ளார்.
  • புகழ்பெற்ற திரவியாவதி நதி புனரமைப்புத் திட்டத்தை, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தொடங்கி வைத்தார்.
  • யுஜிசி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் புதிய நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளது. அதில், மாணவர்களைக் கல்லூரியின் சேர்க்கைக் கட்டணம், பாடப் பிரிவு, நிர்வாக வசதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகத்தை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • #MeToo மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டதை அடுத்து, அவர் தனது பதவியை நேற்று (அக்டோபர் 17) ராஜினாமா செய்தார். பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #MeToo ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  • சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று (அக்டோபர் 17) வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது.

 

விருதுகள்

  • ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை, உயர் எரிசக்தி கொள்கை விருது வழங்கி, கவுரவித்துள்ளது.

 

விளையாட்டு

  • அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் இளைஞர் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  • 3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 17 வயதான பிரவீன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர்.

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here