தேசியம் காத்த செம்மல்

பிறப்பும் வளர்ப்பும்:

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள்

பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.

பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார்.

இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார்.

ஆசிரியர் = குறைவற வாசித்தான் பிள்ளை.

கல்வி:

கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய

கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொது, அங்கு ப்ளேக் நோய் பரவியதால் இவரின் கல்வி நின்றது.

பொதுத்தொண்டில் நாட்டம்:

32 சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை உழுபவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்.
சமபந்தி முறைக்கு ஊக்கம் அளித்தார்.

குற்றப்பரம்பரை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.

சாதியை பற்றி:

“சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியையும் நிறமும் அரசியலுக்குமில்லை, ஆன்மீகத்திற்கும் இல்லை.

நேதாஜி:

முத்துராமலிங்கர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை தம் அரசியல் வழிகாட்டியாக கொண்டார்.

வாய்பூட்டு சட்டம்:

விடுதலை போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வட இந்தியாவில் திலகருக்கும், தென்னிந்தியாவில் தேவருக்கும் வாய்பூட்டு சட்டம் போட்டது.

தேசியம் காத்த செம்மல்:

முத்துராமலிங்க தேவரை “தேசியம் காத்த செம்மல்” என்று திரு.வி.க பாராட்டினார்.

அரசியல் வாழ்க்கை:

முத்துராமலிங்கர் ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு ஐந்து முறையும் வெற்றி பெற்றார்(1937, 1946, 1952, 1957, 1962).

தொகுதிக்கு செல்லாமலே வெற்றி பெற்றார்.

சிறந்த பண்பாளர்:

“தெய்வீகம், தேசியம்” ஆகிய இரண்டையும் இரு கண்களாகப் போற்றியவர்.

“வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என்று கூறினார்.

பாராட்டு பெயர்கள்:

வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை.

மனிதனின் மனநிலை:

“பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” என்று இறப்பின் நிலை பற்றி கூறியுள்ளார்.

மனிதனின் மனநிலையை “இருள், அருள், மருள், தெருள்” என குறிப்பிடுகிறார்.

மறைவு:

55 ஆண்டுகள் வாழ்ந்து 1963ம் அக்டோபர் 30இல் தம் பிறந்தநாள் அன்றே இயற்கை எய்தினார்.

சிறப்பு:

முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.

நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்.

6 ஆம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்:

இசையமுது

பழமொழி நானூறு

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

சித்தர் பாடல்

தாகம்

பெரியார்

புறநானூறு

திண்ணையை இடித்து தெருவாக்கு

தேசியம் காத்த செம்மல்

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here