பரிதிமாற் கலைஞர்

பிறப்பு:
சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்.
தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.

கல்வி:
தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

இயற்றமிழ் மாணவர்:
தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை “இயற்றமிழ் மாணவர்” எனப் பெயரிட்டு அழைத்தார்.

மதுரைச் தமிழ்ச்சங்கம்:
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

திராவிட சாஸ்திரி:
யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.

தனிப்பாசுரத்தொகை:
பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
இந்நூலினை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

கம்பராமாயண உவமை:
பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த பொது நடந்த நிகழ்வு.
கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய “ஆர்தரின் இறுதி” என்னும் நூலில் இருந்து ஒரு பாடலி சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.

தமிழின் சிறப்பை உணர்த்தல்:
வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.
தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.

தமிழ்த்தொண்டு:
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.

படைப்புகள்:
“ரூபாவாதி, கலாவதி” முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
“சித்திரக்கவி” என்னும் நூலைப் படைத்தார்.
குமரகுருபரரின் “நீதிநெறிவிளக்கம்” நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

இதழ்ப் பணி:
மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த :ஞானபோதினி” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
மும்மொழிப் புலமை உடையவர்.
மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் “செந்தமிழ்” இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.
தமிழ்மொழி “உயர்தனிச் செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டினார்.

மறைவு:
தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் இயற்கை எய்தினார்.
நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

 

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here

Read Online

>>>Download TNPSC பொதுத்தமிழ் பரிதிமாற்கலைஞர் குறிப்புகள் PDF<<<