புறநானூறு

நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ

அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்ல வாழிய நிலனே

-ஒளவையார்

சொற்பொருள்:

ஒன்றோ – தொடரும் சொல்

அவல் – பள்ளம்

மிசை – மேடு

நல்லை – நன்றாக இருப்பாய்

நூல் குறிப்பு:

புறநானூறு = புறம் + நான்கு + நூறு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.

எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.

சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை உடையது.

தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக புறநானூறு திகழ்கிறது.