பாரதியார்

வாழ்க்கைக் குறிப்பு:
இவரின் இயற்பெயர் = சுப்பிரமணியம்
ஊர் = எட்டயபுரம்
பெற்றோர் = சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள்
மனைவி = செல்லம்மாள்
காலம் = 11.12.1882-11.09.1921(39 ஆண்டுகள்)

பாட்டுக்கொரு புலவன் பாரதி – என தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர்.
பாரதியார் ”நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி”, ”தன்னிகரற்ற புலமைபெற்ற பேரறிவாளர்”
பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசபையால் வழங்கப்பட்டது.
1904ல் மதுரையில் பாரதி எழுதிய பாடல் ”விவேகபானு” என்னும் இதழில் வெளியானது.
மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில்தமிழ் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார்.

பாரதியின் சிறந்த படைப்புகள்
குயில்பாட்டு – நகைச்சுவை இசைப்பாட்டு
கண்ணன்பாட்டு
பாஞ்சாலி சபதம் – இது முப்பெரும் படைப்புகளில் ஒன்று.

உரைநடை இலக்கியங்கள்
தமிழில் வசனக்கவிதைகளின் முன்னோடி இவரே
ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதவிய உரைநடை இலக்கியங்களையும் எழுதினார்.

அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு – பாரதி
வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – பாரதியின் நவீன கவிதை
கண்ணன் பாட்டு – கண்ணன் மீது பாடல் தொகுப்பு குயில் பாட்டு – இசை மீது பாடல் தொகுப்பு
அனைவரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய உரிமைக் காப்பியமாகக் தமிழில் பாரதி வடித்துத் வந்ததே – ”பாஞ்சாலி சபதம்”
பாஞ்சாலி சபதம்:
சூழ்ச்சிச் சருக்கம்,
சூதாட்ட சருக்கம்,
அடிமைச் சருக்கம்,
துகிலுத்தல் சருக்கம்,
சபதச் சருக்கம்

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here

Read Online

>>>Download TNPSC-பொதுத்தமிழ் பாரதியார் குறிப்புகள் PDF<<<