பறவைகள் பலவிதம்

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.

உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் “பறவைகள் சரணாலயம்”

அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக பறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது “வலசை போதல்” என்பர்.

பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.

ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.

வயல்வெளிகளில் பயிர்களைத் தாகும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்று, விவசாயிகளுக்கு உதவுகின்றன.

நம் நாட்டில் ஏறத்தாழ 2400 வகை பறவைகள் உள்ளன.

பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.

  • தேனை குடித்து வாழும் பறவைகள்
  • பழத்தை உண்டு வாழும் பறவைகள்
  • பூச்சியை தின்று வாழும் பறவைகள்
  • வேட்டையாடி உண்ணும் பறவைகள்
  • இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.


பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.

சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்:

மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.

நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்:

கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

மலைகளில் வாழும் சில பறவைகள்:

இருவாச்சி, செந்தலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13

ஆறாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்

இராமலிங்க அடிகள்

திருக்குறள்

உ.வே.சா

கடைசிவரை நம்பிக்கை

நாலடியார்

பாரத தேசம்

பறவைகள் பலவிதம்

பாம்புகள்

நான்மணிக்கடிகை

ஆராரோ ஆராரோ

வீரச்சிறுவன்

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here