பாம்புகள்

பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.

சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.

பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.

52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.

பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.

பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய எச்சிலில் நஞ்சு வைத்துள்ளது.

பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செயல்படும்.

வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை “விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும்.

பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவிலுள்ள இராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. இராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.

ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று. கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.

பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் பாம்பு அவ்வாறு செய்கிறது.

நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (cobrozincobrozin) எனும் வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972இன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் பருவத்தில் உள்ள மற்ற தலைப்புகள்

இராமலிங்க அடிகள்

திருக்குறள்

உ.வே.சா

கடைசிவரை நம்பிக்கை

நாலடியார்

பாரத தேசம்

பறவைகள் பலவிதம்

பாம்புகள்

நான்மணிக்கடிகை

ஆராரோ ஆராரோ

வீரச்சிறுவன்

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here