ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் - ஒரு விரிவான பார்வை

வேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கம் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலை கடந்த 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996 முதல் உற்பத்தியை தொடங்கியது.

இந்தியாவில் உள்ள முன்னணி தாமிர உருக்காலையான இந்த ஆலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதனை உருக்கி தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆலையின் முக்கிய உற்பத்தி பொருட்கள் தாமிர கேத்தோடு (cathode) மற்றும் தாமிர கம்பிகள் ஆகும். ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தாமிரத்தை தவிர இணை பொருட்களான கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஜிப்சம் போன்றவையும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் தாமிர தேவையில் பெரும் பகுதியை ஸ்டெர் லைட் நிறுவனம் பூர்த்தி செய்கிறது.

ஆலை விரிவாக்கம்

தாமிரத்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனம் முடிவு செய்தது. கூடுதலாக, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஆலையை நிறுவ முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விரிவாக்கத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் முறையாக பெற்றுவிட்டதாக ஸ்டெர்லைட் நிறுவனம் கூறுகிறது.

பாதிப்புகள்

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

தொடர்ந்து 2.3.1999 அன்று ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் மயங்கி விழுந்தனர். தொடங்கப்பட்ட நாள் முதல் 2013&ஆம் ஆண்டு வரை 82 முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இன்று வரை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். 1994 முதல் 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் தீய விளைவுகளை உணர்ந்ததால் தான் அந்த ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவைத் தொடர்ந்து இந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தயவால், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டுத் தான் இந்த ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டால் 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை, சிறுநீரகக்கல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

TNPSC Group 4 Recruitment 2018-19 - 11994 vacancies - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here

TNPSC பொதுத்தமிழ் Materials - Click here

TNPSC பொது அறிவு Materials - Click here