• ஸ்லோவாக்கியா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வழக்கறிஞர் ஷினானா கபுடோவா (Zuzana Caputova) வெற்றி பெற்றுள்ளார்.இவர் தான் ஸ்லோவாக்கியா நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார்.
  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரஹாம் ரீட் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் 2022ல் நடைபெறும் உலககோப்பை போட்டி வரை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார்.
  • சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Initiative” (BRI) திட்டத்தில் இணைவதற்கு “இத்தாலி” நாடு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.G7 நாடுகளில் இருந்து Belt Road Initiative திட்டத்தில் இணையும் முதலாவது நாடு இத்தாலி ஆகும்.
  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் (IIT – Madras) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உப்பு நீரை சூரிய ஒளியின் மூலம் குடிநீராக மாற்றும் முதலாவது ஆலையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் அமைத்துள்ளனர்.இத்திட்டத்திற்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தினால் நிதியளிக்கப்படுகிறது.
  • மைக்ரோ சாப்ட் நிறுவனமானது வாசிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, டிஜிட்டல் தகவல்களை டி.என்.ஏ (DNA) ஆக மாற்றும் கருவியை கண்டறிந்துள்ளனர்.இந்த மென்பொருள் அமைப்பானது 0 மற்றும் 1 என்ற டிஜிட்டல் தகவல்களை DNA வரிசையில் உள்ள (அடினைன், தையமின், குவானைன், சைட்டோசைன்) ஆக மாற்றி தரவுகளை சேமிக்கிறது.
Previous123434Next